Advertisment

வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு- தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Private TV employee incident - Tamil Nadu Chief Minister announces relief

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Advertisment

சென்னை ஜாபர்கான் பேட்டையில் இரவு பணி முடிந்து திரும்பும்போது மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டப்பட்டிருந்த வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் தொலைக்காட்சியின் ஊழியரான முத்துகிருஷ்ணன் (24) என்பவர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வர் தொலைக்காட்சி ஊழியர் முத்துக்கிருஷ்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முத்துக்கிருஷ்ணனை இழந்து வாடும் குடும்பத்திற்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் ஆறுதல் மற்றும் இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், பத்திரிகையாளர் குடும்ப உதவி திட்டத்தின் மூலம் 3 லட்ச ரூபாய் என மொத்தம் 5 லட்சம் ரூபாயை முத்துகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

media TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe