Private train! Trade unions struggle

Advertisment

மத்திய அரசு சுற்றுலா என்ற பெயரில் கோவை –ஷீரடிஇடையிலான விரைவு ரயிலையும், ராமாயணயாத்ராஎன்கிற பெயரில் டெல்லி –நேபாள்விரைவு ரயிலையும்,பாரத்கெளரவ்என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களையும் மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது.

இதனைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் தென்னக ரயில்வே முழுவதும் கருப்பு தினமாக அனுசரித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனை முன்பு பொதுச் செயலாளர்வீரசேகரன்தலைமையில் மத்தியஅரசைக்கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச் செயலாளர்வீரசேகரன்செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பொதுச் சொத்துக்களையும், அரசுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். சுற்றுலா என்ற பெயரில்ரயில்களைத்தனியாருக்குத்தாரைவார்ப்பதைத்தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.