Advertisment

ஜனவரி - 2இல் தனியார் பள்ளிகள் திறப்பு!

Private schools opening on January - 2

Advertisment

பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த அரையாண்டுத்தேர்வு கால அட்டவணைப்படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு கடந்த 13 ஆம் தேதி அரையாண்டுத்தேர்வு தொடங்கி இன்று வரை தேர்வு நடைபெற்றது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று இன்றுடன் (22.12.22023) நிறைவடைந்தது.

இதனையொட்டி நாளை (23.12.2023) முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரைபள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக பாடத் திட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர் ஜனவரி 2 ஆம் தேதி தனியார் பள்ளிகளைத்திறக்க வேண்டும் எனத்தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

examination holiday school
இதையும் படியுங்கள்
Subscribe