Published on 08/09/2020 | Edited on 08/09/2020

கல்விக் கட்டண வசூல் விவகாரத்தில் அரசின் உத்தரவை மீறியதாக 108 தனியார் பள்ளிகள் மீது புகார் வந்துள்ளதாக தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்ககம் கூறுகையில், 'உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 40 சதவீதத்திற்கும் அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக 108 தனியார் பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. 40 சதவீதத்திற்கும் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த 108 பள்ளிகள் மீது மீதான புகார் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்துவர். கல்விக் கட்டண வசூலில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளது.