Advertisment

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப்பள்ளி ஆசியர்கள் சம்பளம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி

salary

தனியார் கல்லூரிகளில் பேராசிரியர்கள், ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவது போல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

நெல்லை கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில்" தனியார் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்துவோர் மாணவ, மாணவிகளிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இது தொழிலாளர் சட்ட விதிகளுக்கு விரோதமானது. பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கல்வி கடன் பெற்று படித்து வேலையில் சேர்ந்துள்ளனர். இவர்கள் குறைவாக சம்பளம் பெறுவதால் கல்வி கடனை செலுத்த முடியவில்லை.

Advertisment

ஆசிரியர் தொழில் முக்கியமானது. இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டமைக்கின்றனர். பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிக குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் கல்வி கடன் செலுத்த கூட போதுமானதாக இல்லாததால் பலர் வெளிநாட்டு வேலைக்கு செல்கின்றனர். எனவே பிஎட், பிஇ, எம்இ முடித்து தனியார் கல்லூரிகளில் பேராசிரியர்கள், ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவது போல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்..

இந்த மனுவை நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது "மனுதாரரின் கோரிக்கையை போலவே சம ஊதியம் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

government school salaries dismissed a petition seeking Private school teachers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe