தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!

Private school bus overturned accident

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூர் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் 32 மாணவர்களை ஏற்றுக்கொண்டு சென்றுள்ளது. அப்பொழுது குறுகிய சாலை என்பதால் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து கவிழ்ந்துள்ளது.

இதில் வாகனத்தில் இருந்த குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு பக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கண்ணாடி உடைத்து பள்ளி குழந்தைகளை மீட்டுள்ளனர். நெற்றியில் காயமடைந்த ஒரு குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர். தனியார் பள்ளி வாகனங்கள் குறுகிய சாலையில் வீட்டிற்குச் சென்று குழந்தைகளை ஏற்றி வருவதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு சாட்டுகின்றனர்.

பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

police students
இதையும் படியுங்கள்
Subscribe