Advertisment

தனியறைக்கு சீல்... மீண்டும் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா!

Private room sealed ... Sivashankar Baba back in hospital!

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவை கைது செய்திருக்கும் நிலையில், நேற்று (17.06.2021) அவர் பலத்த பாதுகாப்புகளுடன் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக சுஷில் ஹரி பள்ளியில் உள்ள அவரது அறைக்குசிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சுஷில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அறை எங்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாதிருந்த நிலையில், நேற்று சிவசங்கர் பாபா நேரில் போலீசாருக்கு அந்த அறையைக் காட்டிக் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்தப் பள்ளிக்குச் சென்று லாவுன்ச் என்று சொல்லக்கூடிய சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் வைத்தனர்.

மேலும்அந்த அறைகாவல்துறையின் கண்காணிப்பில்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த அறையில் இருந்த கணினியின் ஹார்ட் டிஸ்க்களையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்திவருகின்றனர். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

CBCID police Sivasankar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe