நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த, நாமகிரிபேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான கோழி தீவனம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த செல்லதுரை உள்பட 6 பேர் பங்குதாரர்களாக சேர்ந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இந்நிறுவனத்தின் கோழித்தீவனங்கள் அதிகளவில் விற்பனை ஆகி வருகின்றன.

 At the private poultry feeding company   Midnight Income Tax Department

இந்நிலையில், செல்லதுரை நடத்தி வரும் கோழித்தீவன நிறுவனம் வரி ஏய்ப்பு குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாமக்கல் வருமான வருமான வரித்துறை உதவி ஆணையர் சிந்தனைச்செல்வி தலைமையில் வருமான வரி அலுவலர்கள் 9 பேர் கொண்ட குழுவினர், பிப். 27ம் தேதி நள்ளிரவில் அந்நிறுவனத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

Advertisment

நடப்பு ஆண்டில் இதுவரை நடந்த கோழித்தீவன விற்பனை விவரங்கள் அடங்கிய பதிவேடுகள், வரி செலுத்திய ஆவணங்கள், அதேபோல் கடந்த ஆண்டு நடந்த விற்பனை விவரங்கள் குறித்த ஆவணங்களை சரிபார்த்தனர். ஆலை உரிமையாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. பிப். 28ம் தேதி காலை 07.00 மணி வரை இந்த விசாரணை நடந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.