Advertisment

தனியார் வேலை வாய்ப்பு முகாம் - பணியாணைகளை வழங்கிய அமைச்சர்

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியின் தலைமையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்சா.சி.சிவசங்கர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்துனர். மேலும், தேர்வானவர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு 46,89,515 ரூபாய் மதிப்புள்ள உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மண்டல இணை இயக்குநர் இர.தேவேந்திரன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisment

Ariyalur ss sivasankar Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe