/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trichy-gh_0.jpg)
தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை திருச்சி பஞ்சப்பூர் அருகே விபத்துக்குள்ளானது. திருச்சி பஞ்சப்பூர் மேக்குடி கிராமம் அருகே வந்துக் கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்ததால் டிரைவர் பேருந்தை வேகமாக திருப்பி உள்ளார். இதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஞானசேகர்(61) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த 17 பேர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவருக்கு மட்டும் பலத்தகாயங்கள் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)