ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் மருத்தவமனைகள் இயங்கும்- மாவட்ட ஆட்சியர் சிவனருள் தகவல்

04:28 PM May 15, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் நிர்வாகிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட இந்திய மருத்துவ சங்க மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டம் மே 14 ந்தேதி மாலை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது.


இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் சிவனருள் செய்தியாளர்களிடம் பேசும்போது, கரோனா வைரஸ் ஊரடங்கு தடை நாட்களில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டது. இந்த மருத்துவமனைகள் மே 15 முதல் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் விவரங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா என்பதை குறித்து தெரிந்து கொண்டு சிகிச்சைகளை அளிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.


மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முககவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியினை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய தடுப்பு அறைகளை அமைத்து பாதுகாப்புடன் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல் மருந்து சீட்டு வழங்கும் முறையை மருத்துவர்கள் தவிர்த்து கைபேசி மூலம் மருந்துகள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் நோயாளிகளிடமிருந்து பணம் பெறும்போது பாதுகாப்புடன் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் வழக்கமாக வரும் நோயாளிகளுக்கு கைபேசி மூலமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வீடுகளுக்கே மருந்துகளை வழங்கும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். மே 15 முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT