Advertisment

அபராதம் விதித்த தனியார் நிதி நிறுவனத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்!

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கி, 'தனியார் வங்கிகள் மற்றும் நுண் கடன் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான தவணைதொகைகளை ஊரடங்கு காலமான 3 மாதம் மற்றும் அதற்கடுத்த 3 மாதங்களுக்கு தவணைத்தொகை கேட்டு நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது' என அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

ஆனால் பெரும்பாலான தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தவணைத்தொகைகளையும், கடந்த 2 மாதங்களுக்கான தவணைத்தொகையுடன் அபராத வட்டியும் கேட்டு நிர்ப்பந்தப்படுத்துகின்றன.

அதேபோல் செல்போன், இருசக்கர வாகனம் போன்றவைகளுக்கு 2 மாதங்களாக தவணை வசூலிக்காத நிறுவனங்கள் தற்போது ஜுன் மாதம் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் பல நிறுவனங்கள் தவணைக்கான காசோலைகளை வாடிக்கையாளருக்கு அறிவிப்பு செய்யாமலேயே வங்கியில் போட்டு செக் பவுன்ஸ் தொகையை வசூலிக்கின்றன. அதிலும் சில நிறுவனங்கள் ஒரே செக்கை ஒரே நாளில் அடுத்தடுத்த நாள்களில் மீண்டும் மீண்டும் செக்கை போட்டு செக் பவுன்ஸ் தொகை என வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது கணக்கில் இருக்கும் சிறு தொகையையும் எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கடன் பெற்றவர்களை தங்களது கடன் தொகையை செலுத்த நிர்ப்பந்தம் செய்வதாகவும், வங்கியில் பணம் இல்லாத சூழ்நிலையிலும் ECS செக்கை பயன்படுத்தி check pounce என்ற முறை குறைந்தபட்சம் 590 ரூபாய் என்கிற பெயரில் 5 முதல் 15 தடவைகள் பண பிடிக்கப்பட்டு உள்ளதால் அது தாங்கள் கட்டவேண்டிய 2000 ரூபாய் தொகையை விட அதிகளவு பிடித்தம் செய்யப்படுவதாகவும் கூறி தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுப் போட்டு பயனாளிகள் போராட்டம் நடத்தினர்.பின்னர் அங்கு வந்த பெரியகடை காவல் துறையினர் பைனான்ஸ் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

Finance private Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe