Private Employment Camp on May 13 in Salem

Advertisment

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம், சேலத்தில் மே 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், வெள்ளிக்கிழமை தோறும் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வருகின்ற வெள்ளிக்கிழமை (மே 13) தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. 8ம் வகுப்பு முதல் முனைவர் பட்டப்படிப்பு வரை எந்த விதமான கல்வித்தகுதி உடையவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Advertisment

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுவோரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427 2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.