Advertisment

மாணவிக்கு பாலியல் தொல்லை! தனியார் கம்பெனி மேலாளர் போக்சோவில் கைது!     

Private company manager arrested under pocso

Advertisment

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுபிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி என்கின்ற கார்த்திகேயன், வயது 29. சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

இவருக்கும், பத்திரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதான +2 மாணவிக்கும் வேளாங்கண்ணி சுற்றுலா செல்லும்போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கார்த்திகேயன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்துமாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் வள்ளி வழக்குப் பதிவுசெய்து, கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

மேலும், பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாய் அம்சவல்லி என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore POCSO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe