கோவை சுந்தராபுரம் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் விஷ்ணு (19). ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடல்நலக்குறைபாடு காரணமாக கடந்த 15 நாட்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றுகாலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த விஷ்ணு முதல் வகுப்பு முடிந்தவுடன் , ஆசிரியர் வெளியே சென்ற பின்திடீரெனஇரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். விஷ்னு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சக கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் விஷ்ணுதற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.