accident

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள தனியார்கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளாகி 30-கும் மேற்பட்ட மாணவமாணவிகள் காயமடைந்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள காவேரி பொறியியல் கல்லூரி எனும் தனியார் கல்லூரி பேருந்து இன்று காலை மாணவ மாணவிகளைஏற்றிக்கொண்டு சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

Advertisment

அந்த கல்லூரியில் இன்று இறகுபந்தாட்ட போட்டிகள் நடைபெற இருப்பதால்கல்லூரி பேருந்து இன்று அதிகாலைசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரை சேர்ந்த போட்டியில் பங்கேற்கவந்த மாணவ மாணவிகள் சுமார் 30 பேரை சுக்கம்பட்டி அருகே ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது நங்கவள்ளி என்ற பகுதியில் சாலையோரம் நின்றிருந்த வாகனம் மீது பேருந்து மோதியும் மேலும் ஒரு பனைமரத்தில் மோதியும்விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.