/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_57.jpg)
ராணிபேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ள, புகழ் பெற்ற நரசிம்ம சுவாமி திருக்கோயில் மலை பகுதியில், 2,000த்துக்கும் அதிகமான குரங்குகள் சுற்றி திரிகின்றது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்த குரங்குகளுக்கு உணவளிப்பது வழக்கம், சில சமயம் அந்த குரங்குகளே அங்கு வரும் பக்தர்களிடம் இருக்கும் பைகளை பிடிங்கி சென்று அதில் உள்ள உணவு பொருட்களை உண்டுவிடும். சில சமயம் அங்கு வரும் பக்தர்களை தாக்கி உணவு பொருட்களைப் பிடிங்கி செல்லும்.
தற்போது கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வருவதை தடை செய்தது அரசு. மேலும் தற்போது கோயில் உள் நிபந்தனைகளுடன் அனுமதித்தபோதும் முன்பைவிட கூட்டம் சொற்பமாகவே உள்ளது. எனவே வழக்கமாக பக்தர்களால் வழங்கப்பட்டுவந்த பழம், தேங்காய், இதர உணவு பொருட்கள் குரங்குகளுக்கு கிடைக்கவில்லை. மேலும், மலைக்காடுகளில் காய்கள் பழங்கள் எதுவும் காணப்படவில்லை.
இதனால் அந்த மலைக்காடுகளில் சுற்றித் திரியும் குரங்குகள் உணவின்றி தவித்து வந்தது. இதனை கேள்விபட்ட, ரியா மெட்ராஸ் மெட்ரோ டிரஸ்ட் நிர்வகிக்கும் சென்னை உணவு வங்கி மூலம் தினமும் பழங்கள், வறுத்தகடலை, மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றது. அப்பகுதி தன்னார்வு மக்களின் உதவியுடன் குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)