Private bus fare tripled ... motor vehicle inspector interviewed!

14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில்இயங்கும் 385 அரசு பேருந்துகளில் 40 பேருந்துகளேஇயக்கப்படுகிறது.தற்காலிகப்பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்கலாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தாலும் நேற்று ஆலங்குடி பகுதியில் ஏற்பட்ட அரசு பேருந்து விபத்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று புதுக்கோட்டையில் வெறும் 15 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்காகதனியார் பேருந்துகளைபொதுமக்கள் நாடியுள்ளார்.

Advertisment

அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதைச்சாதகமாக எடுத்துக்கொண்டு தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.குறிப்பாக புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம்வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்ல ரூபாய் 37 ஆகக் கட்டணம் இருந்தநிலையில், தற்போது 150 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகபயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்துபுதுக்கோட்டைதனியார் பேருந்துகளில்மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் தலைமையில்நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களை இன்று மாலை 3 மணிக்குபேச்சுவார்த்தைக்குஅழைத்துள்ளதுதொழிலாளர் நல ஆணையம்என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment