கோவை உக்கடம் பேருந்துநிலையத்தில் குறித்த நேரத்திற்கு பேருந்தை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பேருந்து ஓட்டுனரும், அரசு பேருந்துஓட்டுனரும் சண்டையிட்டுகொண்ட காட்சி வாட்சப்பில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

 Private bus drivers collide in Coimbatore... police investigation  Private bus drivers collide in Coimbatore... police investigation

உக்கடத்தில் இருந்து எண் மூன்று கொண்ட தனியார் பேருந்து கிளம்ப வேண்டிய நேரத்தில் 30 F என்ற அரசு பேருந்து கிளம்பியுள்ளது. இதனால் இரு ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏறட்டு பொதுமக்கள் முன்னிலையில் சண்டையிட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் தனியார் பேருந்து ஓட்டுனர் தனுஷ் காயமுற்றார். அக்கம்பக்கத்தில் நின்றிருந்த ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அவர்களை பிரித்துவைத்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாகஉக்கடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.