Advertisment

தனியார் பேருந்து- ஆம்னி வேன் மோதி விபத்து! 

PRIVATE BUS AND OMNI VAN INCIDENT CCTV FOOTAGE

தனியார் பேருந்தும், ஆம்னி வேனும் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisment

செம்பட்டி திண்டுக்கல் சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேனை திடீரென ஓட்டுநர் திரும்பியுள்ளார். இதனால், பின்னால் வந்த தனியார் பேருந்து வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். மேலும், இரு சக்கர வாகனங்களின் மீது ஆம்னி வேன் மோதியதில் மூன்று வாகனங்கள் சேதமடைந்தனர்.

Advertisment

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை நேரில் ஆய்வு செய்தனர்.

அதில், பேருந்து மற்றும் ஆம்னி வேன் மோதிக்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், அதனை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

incident bus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe