புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் திவ்யா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் முதலியார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் டியூசன் சென்டரிலும் படித்து வந்தார்.
நேற்று இரவு டியூசன் முடித்த பின்னர் ராமச்சந்திரன் தனது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது கடலூர் சாலையில் பிராமீனாள் வீதி அருகே சென்றபோது சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக ராமச்சந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் திவ்யா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் அவர் மீதுஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். தனது கண் முன்னே தன் மகள் இறந்ததை கண்டு அலறி துடித்தார் ராமச்சந்திரன். இதனை பார்த்த உடன் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதேசமயம் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனியார் பஸ் டிரைவரை சுற்றி வளைத்து பிடித்து, அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் சிலர் ஆத்திரத்தில் விபத்து ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கினர். அப்போது அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு இறங்கி சிதறி ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்தில் பலியான மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் புதுச்சேரி - கடலூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிட மறுத்ததாதல் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.