விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த மடவார்வளாகம் விளக்கு என்ற இடத்தில் ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர்.
அதைத் தொடர்ந்து, படுகாயமடைந்த 30 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து காரணமாக, மதுரை, கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.