Advertisment

திருச்சி - சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்குகிறது இண்டிகோ நிறுவனம்!

Private airline plans to offer additional flights

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்துபெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவையை வழங்கிவருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே சென்னையிலிருந்து திருச்சிக்குத் தினந்தோறும் மூன்று விமான சேவைகளை வழங்கிவந்தது.

Advertisment

இந்நிலையில், வருகிற 30ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வரும் இண்டிகோ விமானம், மீண்டும் சிங்கப்பூருக்கு இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானம் மீண்டும் மறுநாள் காலை 10 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்து இரவு 10:55 மணிக்கு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்லும். இதனால் திருச்சியிலிருந்து சென்னைக்கும், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கும் மேலும் ஒரு விமான சேவை வழங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Advertisment

indigo flight trichy airport
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe