
அண்மையில் காவல்துறை மற்றும் என்ஐஏ சார்பில் திருச்சி சிறப்பு முகாமில் சோதனைகள் நடைபெற்றது. கேரளாவில் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனையானது நடைபெற்றிருந்தது. இந்த சோதனையில் 3 லேப்டாப்கள், 143 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவற்றை திருப்பி தர வேண்டும் என சிறைக்கைதிகள் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகம் உள்ளது. ஆவணங்கள் இன்றி இந்தியா வருதல் என்பன பல விவகாரங்களில் தொடர்புடைய சூடான், இலங்கை, பல்கேரியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நபர்கள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் 3 லேப்டாப்கள், 143 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களை திரும்ப தரக்கோரி சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.