The prisoner was suffocating; Admission to Salem GH!

Advertisment

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சேலம் சிறைக்கைதி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). கடந்த 2017ம் ஆண்டு, சாதி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை ஆத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே, பிணையில் வெளியே வந்த அவர், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த சிலநாள்களுக்கு முன்பு நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. அதன்படி சுரேஷை, காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisment

இந்நிலையில் சுரேஷுக்கு வெள்ளிக்கிழமை (செப். 16) இரவு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து தொடர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.