Prisoner passed away in Ayyappakkam

தெலுங்கான மாநிலம், ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் ராஜு அந்தோனி எனும் நபரை காவலதுறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்சென்னை அயப்பாக்கத்தில் உள்ள இந்திய போதைப் பொருள் கட்டுப்பாடு அலுவலத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார்.

Advertisment

இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவர் அந்த அலுவலகத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்ததாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர்அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரது மரணம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

தற்கொலை செய்துகொண்ட விசாரணை கைதி ராஜு,சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களை அவர்களிடம் இருந்து சிறிது சிறிதாக வாங்கி மொத்தமாக ரூ. 50 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை தன்வசம் வைத்து வியாபாரம் செய்து வந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.