Advertisment

சிறப்பு முகாமிலிருந்து தப்பிய கைதி..!

Prisoner escapes from special camp ..!

Advertisment

திருச்சி மத்தியச் சிறையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெறப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.தற்போது சுமார் 116 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட பல்கேரிய நாட்டைச் சேர்ந்த லிலியன் என்பவர் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் நேற்று முன் தினம் சிறப்பு முகாமிலிருந்து தப்பியுள்ளார். அவரை தேடும் பணியில் சிறை அதிகாரிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்று முகாம் சிறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த லிலியன் என்பவர் நிச்சயம் சுற்றுச் சுவர்களைத்தாண்டி சென்றிருக்க வாய்ப்பில்லை அவர் தப்பிச் செல்வதற்கு வழிவகுத்தது தண்ணீர் கொண்டு வரும் டேங்கர் லாரியாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். மேலும், அவர் தப்பிச் செல்ல வேறு ஏதும் வழி இருந்ததா என்றும் ஆராய்ந்துவருகின்றனர்.தப்பிச் சென்ற லிலியனைத்தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe