Prisoner escapes from police station

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு குளக்கரை பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (22). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்துவதற்தாக காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, கை விளங்குடன் காமேஷ் காவல் நிலையத்தில் அமரவைக்கப்பட நிலையில், காவலர்களின் மெத்தனப்போக்கால் காட்பாடி காவல் நிலையத்திலிருந்து கை விலங்குடன் காமேஷ் தப்பி ஓடியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், காட்பாடி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து, காட்பாடி முழுவதும் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்து தப்பியோடிய காமேஷை தேடி வருகிறனர். தமிழ்நாடு முழுவதும் 12-காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்ட்டதில் காட்பாடி காவல் நிலையமும் ஒன்று. அந்த காவல் நிலையத்தில் இருந்து கைதி விலங்குடன் தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment