/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2755.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம்,தியாகதுருகம்அருகில் உள்ளவடதரசாலூர்கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(35). இவரது இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் திருக்கோவிலூர்சந்தைப்பேட்டைபகுதியைச் சேர்ந்த நிசார் அகமது(40) என்பவரைதியாகதுருகம்போலீசார்கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக நிசார் அகமதுவை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துவதற்காகதியாகதுருகம்காவல் நிலையபோலீசார்ராஜா, ராதாகிருஷ்ணன், ஆனந்த் ஆகிய மூவரும் அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துவதற்காககாத்திருந்தபோது மாலை சுமார் ஐந்து மணி அளவில் விசாரணை கைதி நிசார் அகமது கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதையடுத்து,போலீசார்அதே வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.கழிவறைக்குசென்ற விசாரணை கைதி தப்பி ஓடினார்.
கைதி நீண்டநேரமாககழிவறையில் இருந்துவெளியே வராததால் காவலர்கள் கழிவறைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கைதி தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பிராஜலட்சுமிஆகியோருக்குபோலீசார்தகவல் அளித்தனர். உடனடியாகஎஸ்.பி உத்தரவின் பேரில்தியாகதுருகம்சப்-இன்ஸ்பெக்டர்குணசேகரன் மற்றும்போலீசார்தப்பிசென்ற விசாரணை கைதியை பல்வேறு பகுதிகளில் தேடினர். அப்போது சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் இரவு 7 மணி அளவில் ஒருபேருந்தில் இருந்துநிசார் அகமது கீழே இறங்கிய போதுபோலீசார்அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சிநீதிமன்றத்திற்குகொண்டு வந்துஆஜர்படுத்தினர். தப்பி ஓடிய கைதியை இரண்டு மணி நேரத்தில் தேடிப்பிடித்தபோலீசாருக்குமாவட்டஎஸ்.பி செல்வகுமார் பாராட்டு தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)