Prisoner attempts  lost their life in Trichy Central Jail

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன்(31). இவர் தஞ்சையில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்தியச் சிறையில் 22 வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதே சிறை வளாகத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சில கைதிகளும் அந்த சிறை அறையில் இருந்தனர். அவர்களை ஒரினச் சேர்கையில் ஈட்டுப்பட்ட முகமது உசேன் அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சக கைதிகள் இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிறைத்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து 22வது பிளாக் இருந்து 10வது பிளாக்கிற்கு முகமது உசேனை மாற்றி அடைத்துள்ளனர்.

அந்த அறையில் தனிமையில் இருந்த முகமது உசேன் மன உளைச்சலில் நேற்று திடீரென்று அங்கிருந்த கண்ணாடி துண்டை வாயில் போட்டுக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கண்டு சக கைதிகள் சத்தமிட்டு அலறினர். இதையடுத்து உடனடியாக சிறை அலுவலர்கள் அவரை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரி சாமிநாதன் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.