சிறை கம்பிகளுக்குள் இளைஞர்கள்... 4- வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சட்டம் திரும்ப பெற முடியாது என்று உறுதியாக கூறிவிட்டார்.

இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களில் இஸ்லாமிய பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

prison youngsters caa four days thiruvaruru muththupet

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் அதிகமாக கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருப்போருக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று (18/02/2020) 4- வது நாள் போராட்டத்தில் சிறை கம்பி கூண்டு போல அமைத்து அதற்குள் கைதிகளாக இளைஞர்கள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மாலை நேரங்களில் மாணவர்கள் போராட்ட களத்திற்கு நேரில் வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

caa muthupet Thiruvarur youngsters
இதையும் படியுங்கள்
Subscribe