Prison warden who supplied cell phones prisoners

சேலம் மத்தியச் சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் வசதி படைத்த கைதிகளிடம் செல்போன் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கைதிகளுக்கு செல்போன் கொடுப்பதாகச் சந்தேகப்படும் வார்டன்களை கண்டறிந்து, அவர்களை சிறைக்கு உள்ளே பணிக்கு அனுப்பாமல் வெளி பணிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். இவ்வாறு வெளி பணியில் இருந்து சிலர் சமீபத்தில் சிறைக்கு உள்ளே அனுப்பப்பட்டனர். அதன் பிறகு செல்போன் புழக்கம் அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

Advertisment

இந்நிலையில், கடந்த வாரம் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கொலை வழக்கு கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், சிறை வார்டன் ஒருவரே செல்போனைக் கொடுத்ததாக அந்தக் கைதி அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். 5 செல்போன்களும் 20 கிராம் கஞ்சாவும் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். இதற்காக 1200 ரூபாய், செல்போனுக்காக 15,000 ரூபாய்,1,800 ரூபாய், 20,000 ரூபாய் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Advertisment

Prison warden who supplied cell phones prisoners

மேலும், தன்னுடைய தாய் அவருக்கு ஜிபே மூலம் பணத்தை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வார்டனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வார்டன் இரண்டு உள்ளாடைகள் அணிந்து அதற்குள் வைத்துக்கொண்டு உள்ளே செல்வாராம். அதே போல், தொப்பிக்குள் செல்போனைகளை வைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரத்தைச் சேகரிக்கும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் அதிகாரிகள், ஓரிரு நாட்களில் அந்த வார்டன் பிடிபடுவார் எனத் தெரிவித்துள்ளனர்.