Advertisment

பந்துக்குக்காக கடையை மூடக்கோரி கலவரத்தில் ஈடுபடுவோர்களுக்கு சிறை-முதல்வர் நாராயணசாமி!

 Chief Minister Narayanasamy

சபரிமலை விவகாரத்தில் கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசின் இந்து விரோத போக்கை கண்டித்து புதுச்சேரியில் இன்று பொது நிறுத்தத்திற்கு புதுச்சேரி பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

புதுச்சேரி மாநில பிரச்சினைக்கோ, பொதுவான பிரச்சினைக்கோ அல்லாமல் வேறொரு மாநில விவகாரத்திற்கு புதுச்சேரியில் பந்த் அறிவித்துள்ளது ஆளும் காங்கிரஸ் அரசு உட்பட பல அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisment

புதுச்சேரியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். புதுச்சேரிக்கு பள்ளிகள் விடுமுறை என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே புதுச்சேரி முதல்வர்செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் நிவாரணப்பணியில் அரசு ஈடுபடும் போது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் செயலில் பாஜக ஈடுபடுகின்றது. அனைத்துக்கட்சியும் கஜா புயல் நிவாரணத்தில் உள்ளதால் பாஜகவும் இதில் ஈடுபட வேண்டும்.

பாஜக முழு அடைப்பை கைவிட வேண்டும். வேண்டுமென்றால் கடை அடைப்பை கேரள மாநிலத்தில் நடத்துங்கள். மதநம்பிக்கை தங்களுக்கும் உண்டு.அரசியல் விளையாட்டை பாஜக இதில் காண்பிக்க கூடாது. மதக் கலவரத்தை தூண்டி அதன் மூலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

.

saparimalai congress narayansamy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe