நன்னிலம் அருகே பரோலில் வெளியில்வந்த ஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisment

thiruvarur

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள விசலூரை சேர்ந்தவர் சாமிநாதன் (38). இவருக்கு சரஸ்வதி (33) என்ற மனைவியும், சந்தோஷ் (11) , ஸ்ரீஹரி (13) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

Advertisment

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் சிறை தண்டனை பெற்று வருகிறார். இந்தநிலையில் கடந்த 14 ந் தேதி முதல் மூன்று நாட்கள் பரோலில் வீட்டிற்கு வந்தார். பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்கு திரும்பவேண்டிய நிலையில் நேற்று இரவு சாமிநாதனும், அவரது மனைவி சரஸ்வதி தூக்குபோட்டு இறந்துள்ளனர்.

இருவரும் இறந்து தூக்கில் தொங்கியதைக் கண்ட அவரது இரண்டாவது மகன் அலறியடித்து வீட்டிற்கு வெளியே வந்து கதறியுள்ளான். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இரண்டு குழந்தைகளும், எதுவும் புரியாமல் தாய், தந்தைகளை இழந்து அனாதைகளாக அழுது புரண்டுவருவது, பார்ப்பவர்களின் மனதை கணக்கவைத்துள்ளது. இருவரின் தற்கொலை குறித்து, நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரோலில் வெளிவந்த கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.