Prison for the person who took the bribe!

Advertisment

கரூரை அடுத்த வெண்ணைமலையில், தொழிலாளர்துறை அலுவலகத்தில், தொழிலாளர் துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கையன் (வயது 58). இவர் கடவூர் வட்டம் தரகம்பட்டியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கிற்கு ஆய்விற்கு செல்வது வழக்கம்.

அப்போது, அங்கு வேலை செய்பவர்களிடம் இவர் குறைவான சம்பளம் வழங்குவது போன்று ஆவணங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டு, வழக்கு போட்டதாகவும், அதற்கு 10 மடங்கு அபராதம் கட்ட வேண்டும் என்றும், இல்லை என்றால் தன்னிடம் 25 ஆயிரம்ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வழக்கை முடித்து தருவதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெண்ணைமலையில் உள்ள தொழிலாளர்த் துறை அலுவலகத்திற்கு மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறும் போது தங்கையனை கையும், களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.