Is the prison all comfortable? Permission to detain and interrogate Manikandan for 5 days!

துணை நடிகையைத் திருமணம் செய்வதாகச் சொல்லிஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக சைதாபேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இன்று (29.06.2021) திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். செங்கல்பட்டு சிறையில் அவருக்கு ஏசி என சகல வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இன்று திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தற்போது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டனை அடையாறு மகளிர் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ''முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் சொகுசு வசதியுடன் இருந்தார் என்பது உண்மைக்குப் புறம்பானது. சைதாப்பேட்டை கிளைச் சிறையில் ஏசி வசதியுடன் மணிகண்டன் இருக்கவில்லை'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்தெரிவித்துள்ளார்.

Advertisment