மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசியுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் இருக்கக் கூடிய கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு தரப்பைச் சேர்ந்த 10- க்கும் மேற்பட்ட கைதிகள், சிறைச்சாலையின் சுவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த கற்களை வெளியே வீசியுள்ளனர். இதனால் மதுரைக்கு அருகே உள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கைதிகள் சிலர் பிளேடால் தங்கள் உடலில் கீறியும் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறை கைதிகளை சிறைத்துறையினர் சமாதானப்படுத்திக் கீழே வருமாறு அழைத்தனர். அதேபோல், இச்சம்பவம் தொடர்பாக சிறைத்துறையின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.