வங்க கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் இன்றிரவுடன் முடிகிறது. இதனால், இனி இலங்கை படையின் அத்துமீறலும், சிறைப்பிடிப்பும் தொடரும் என தமிழக மீனவ மக்கள் அஞ்சுகின்றனர். விதி விட்டவழி என அவர்களும் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஏற்கனவே சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தி மீனவ மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதாவது ஏப்ரல் 14-ந்தேதி மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னதாக ஏப்.05-ந்தேதி தமிழக எல்லைப் பகுதியில் மீன்பிடித்த நாகை மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை படையினர், 18 பேரை சிறைப்பிடித்து யாழ்ப்பானம் சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று(14-06-2019) பருத்திதுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 18 பேரும் விடுவிக்கப்பட்டனர். 2 மாத சிறைவாசத்திற்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கும் மீனவர்கள், ஓரிருநாளில் தாயகம் திரும்புகின்றனர். அதே நேரத்தில் மீண்டும் நாம் சிறைபடுவோம் என்ற அச்ச உணர்வும், படகுகளை விடுவிக்காதததும் அவர்களது மனதை வாட்டுகிறது.