Published on 12/11/2021 | Edited on 12/11/2021

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க தமிழ அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சியை பிடித்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் கூறியவாறே அரசு பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது கூடுதலாக முதல்தலைமுறை பட்டதாரி, கரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.