ரப

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertisment

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை தினமும் 3 ஆயிரத்தைக் கடந்து அதிகரித்து வருகின்றன. பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுகோட்டை மாவட்டத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஊரக, நகராட்சி, பேரூராட்சி அமைப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே விழா நடத்த வேண்டும் என ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.