Advertisment

பிரதமரின் பிறந்தநாள்: நிபந்தனையுடன் மினி மாரத்தான் நடத்த அனுமதி

Prime Minister's Birthday: Permission to hold mini-marathon with conditions!

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மினி மாரத்தான் போட்டியை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மினி மாரத்தானை நடத்த அனுமதிகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றக் கிளை, மாரத்தான் போட்டியின் போது, எந்த மத மற்றும் சாதிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ முழக்கங்களை எழுப்பக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதேபோன்று பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி, இதில் ஏதேனும், ஒன்றை மீறினாலும் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe