பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை

modi

இடதுசாரி அமைப்புகளின் எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர் கவுதமன் ஆகியோர் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தியாகு அவர்கள், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள உபா, தேச துரோக வழக்கை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனடியாக அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் கேரள வெள்ள நிவாரண நிதி வசூல் செய்த மாணவி வளர்மதி மீது பாலியல் ரீதியில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

PRESS MEET

இதுபோல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோர் மீது மத்திய பிஜேபி அரசு மத சார்பிலும், காவல்துறையை கட்டவிழ்த்துவிட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இதனை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

மேலும் இடதுசாரி அமைப்புகளின் எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர் கவுதமன் ஆகியோரை பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியவர்களை, உள்நோக்கத்தோடு காவல்துறை கைது செய்துள்ளனர் எனவும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

modi
இதையும் படியுங்கள்
Subscribe