'மரபை மீறி வரலாற்றில் இடம்பிடிக்க நினைக்கிறார் மோடி' - கே.எஸ்.அழகிரி

'Prime Minister Nehru, why even Indira Gandhi did not act like this'-KS Alagiri

புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில் ''அரசாங்கத்தினுடைய தலைவர் குடியரசுத் தலைவர் தான். நம்முடைய இந்திய ஜனநாயகத்தில் சில மரபுகள் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும் கூடுகின்ற பொழுது அதில் உரையாற்றுகின்ற உரிமை குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருக்கிறதே ஒழிய பிரதமர் அமர்ந்து தான் இருக்க வேண்டும். அதேபோல் நாடாளுமன்றம் என்பது இரண்டு அவைகளுக்கும் சொந்தமானது.

NN

ஒன்று நாடாளுமன்ற பேரவை தலைவர் அதனைத் திறந்து வைக்கலாம்அல்லது குடியரசுத் தலைவர் திறந்து வைக்கலாம். பேரவை தலைவரை விட குடியரசுத் தலைவர் அந்த அமைப்பில் உயர்ந்தவர் என்ற காரணத்தினால் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுப்பதுதான் மரபு. பிரதமர்கள் திறப்பது மரபு அல்ல. மோடி மரபை மீறுகிறார். ஏன் மரபை மீறுகிறார் என்றால் அவருக்கு எல்லாவற்றையும் கைப்பற்ற வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. நாடாளுமன்றத்தை திறப்பதன் மூலமாக அவருடைய பெயர் அதில் இடம்பெறும். அதனால் இந்தியாவினுடைய வரலாற்றில் என்றென்றைக்கும் தன்னுடைய பெயர் இருக்கும் என்று கருதுகிறார்.

பிரதமர் முன்னிலையில் குடியரசுத் தலைவர் திறக்கிறார் என்று சொல்லியிருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்காது. ஆனால் தன்னுடைய குடியரசுத் தலைவரின் பெயர் அதில் வருவதையே அவர் விரும்பவில்லை. அதுதான் பிரச்சனை. வலிமையான குடியரசுத்தலைவர்; முப்படைகளுக்கு தலைவர்; இரண்டு அவைகளுக்கும் தலைவர்; எல்லா சட்டமன்றங்களுக்கும் தலைவர். அவருக்குத்தான் அந்த உரிமை இருக்கிறதே ஒழிய பிரதமருக்கு கிடையாது. முன்னாள் பிரதமர் நேரு, ஏன் இந்திரா காந்தி கூட இவ்வாறு நடந்து கொண்டது கிடையாது. இப்பொழுது கூட காலம் தாழ்ந்து விடவில்லை. அவர் இந்த முடிவை மாற்றிக் கொள்ளலாம். குடியரசுத்தலைவர் திறப்பது தான் அதிகாரப்பூர்வமானது; அங்கீகரிக்கப்படக் கூடியது'' என்றார்.

congress modi parliment
இதையும் படியுங்கள்
Subscribe