ADVERTISEMENT

தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி! (படங்கள்)

08:13 PM Jan 12, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து இன்று (12/01/2022) காணொளி காட்சி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் ரூபாய் 4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். அதேபோல், சென்னை பெரும்பாக்கத்தில் ரூபாய் 24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/01/2022) தலைமைச் செயலகத்தில், மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT