பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை (30/09/2019) காலை 09.00 மணியளவில் சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.

Advertisment

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56- வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

Advertisment

இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தனராகபங்கேற்கிறார்.

prime minister narendra modi arrive at tamilnadu tomorrow iit graduation function

இந்த நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பிற்பகல் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கு இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Advertisment

பிரதமர் வருகையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.