சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு செண்டை மேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு.
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை அடுத்து, டெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மாநில அமைச்சர்கள, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், அரசு அதிகாரிகள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Prime-Minister-assures-support-to-rain-ravaged-Tamil-Nadu-1024x654.jpg)
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்குசென்று ஓய்வெடுக்கிறார். இதனிடையே பிரதமர் மற்றும் அதிபர் வரவேற்பதற்காக பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த போதிலும், தமிழக சார்பில் பேனர் வைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)