Skip to main content

“ஒரு சிறப்பு செல்ஃபி...” - மாற்றுத்திறனாளி தொண்டர் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

Prime Minister Modi tweeted about the party member

 

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பின் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழ் மக்கள் மீது தனக்கு மிகுந்த ஈர்ப்பு இருப்பதாகவும், தான் தமிழ் மொழியை; தமிழ்க் கலாச்சாரத்தை மிகவும் நேசிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரை சந்தித்து அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

 

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, “ஒரு சிறப்பு செல்ஃபி... சென்னையில் எஸ்.மணிகண்டனை சந்தித்தேன்.  அவர் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெருமைமிக்க பாஜக கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார். மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்கு கொடுக்கிறார். எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்