“தப்லீக் ஜமாத் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஜவாஹிருல்லா

publive-image

2021ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சிறப்பான இடங்களைப் பெறுவோம் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஈரோட்டில் கூறினார்.

மனித நேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ஜவாரஹிருல்லா தலைமையில் ஈரோட்டில் 22ஆம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா, “வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு முழுமையாகப் பாடுபட உள்ளோம். தி.மு.க. கூட்டணியில் சிறப்பான இடங்களை நாங்கள் பெறுவோம்” எனக் கூறினார்.

மேலும் பேசுகையில், “அ.தி.மு.க. அரசு மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாக செயல்பட்டு, தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை இழந்துள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு கரோனா பரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்ட தப்லிக் ஜமாத்தினரிடம் மன்னிப்பு கேட்பதோடு, இழப்பீடும் வழங்க வேண்டும். தப்லீக் ஜமாத் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அச்சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe