'' Real Jallikattu Man Prime Minister Modi '' - OBS Praise!

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இன்று (30.03.2021) பாஜக தமிழக தலைவர் எல்.முருகன்போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் இந்தப் பொதுக்கூட்டத்தில்பங்கேற்றனர்.

Advertisment

திருப்பூர் - உடுமலைபேட்டை சாலையில் உள்ள அமராவதி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக பாஜக தலைவரும், பாஜக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான எல்.முருகன் மோடியை வரவேற்று பேசினார். அதனையடுத்து பேசிய தமிழக துணை முதல்வர்ஓபிஎஸ், ''ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான். அவர்தான் தடையை நீக்கினார். சுதந்திரத்திற்குப்பின் ஆட்சி செய்து நாட்டை சீரழித்த அரசு, காங்கிரஸ் அரசு'' என்றார்.