Prime Minister Modi is coming to Tamil Nadu soon

பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

நவம்பர் 11ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். இருப்பினும் இன்று மாலை தமிழக பாஜக சார்பில் பிரதமரின் வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது மட்டுமல்லாது திண்டுக்கல்லில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்படும் கட்சி விழா ஒன்றிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment